டவ் ஷாம்பூவால் கேன்சர் அபாயம்? மொத்தமாக ஷாம்பூவை திரும்ப பெற முடிவு!
டவ் உள்ளிட்ட ஷாம்பூ நிறுவனங்களின் ட்ரை ஷாம்பூக்களில் கேன்சர் உருவாக்கும் வேதியியல் பொருள் அதிகம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஹேர் ஷாம்பூ தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறாக அமெரிக்காவில் விற்பனையாகும் ஷாம்பூ உள்ளிட்ட பல பொருட்களும் வேதியியல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
அவ்வாறாக மேற்கொண்ட ஆய்வில் இந்துஸ்தான் யூனிலிவர் தயாரிப்பான டவ் ட்ரை ஷாம்பூவில் பென்சின் என்னும் வேதிபொருள் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேதி பொருள் கேன்சரை உருவாக்கும் அபாயம் கொண்டது என கூறப்படுகிறது.
டவ் ஷாம்பூ மட்டுமல்லாமல் நெக்ஸஸ், சாவே, டிகி மற்றும் ட்ரஸ்ஸமே உள்ளிட்ட ஷாம்பூ நிறுவன பொருட்களிலும் இந்த பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தனது தயாரிப்புகளை திரும்ப பெறும் முடிவை இந்துஸ்தான் யூனிலிவர் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த ஆய்வு இந்திய சந்தை தயாரிப்புகளுக்கு பொருந்தாது என்றும் கூறப்படுகிறது.
Edited By Prasanth.K