வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (07:39 IST)

வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற தடை: டிரம்ப் அதிரடி உத்தரவு

வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் கையெழுத்திடுவார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த மசோதாவில் அவர் கையெழுத்திட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அடுத்த 60 நாட்களுக்கு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் வெளிநாட்டினர் குடியேற  தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் இந்த தடை விரைவில் விலக்கப்படும் என்றும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
 
கொரோனா மிக வேகமாக பரவுவதால் மட்டுமின்றி அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்கள் பறிப்பதாகவும் இதற்காக இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற இந்தியா மாத்திரை கொடுத்து உதவியுள்ளதால் இந்தியாவுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள ஒருசில அமைப்புகள் அமெரிக்க அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த வேண்டுகோளை ஏற்று கொள்ளாத அமெரிக்கா, இந்தியர்கள் உள்பட எந்த வெளிநாட்டினரும் அமெரிக்காவில் குடியேற முடியாது என்றும், கொரோனாவால் வேலையில்லாமல் தவிக்கும் அமெரிக்கர்களுக்கு இந்த தடை உதவும் என்றும், இந்த தடையால் அமெரிக்கர்கள் மீண்டும் வேலை தேட முடியும் என்றும் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.