புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (07:26 IST)

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,804 பேர் பலி: கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,804 பேர் பலி: கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,804 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 45,318ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் புதிதாக 25,985 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8,18,744ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகின் மொத்த கொரோனா பாதிப்பில் 3ல் ஒரு பங்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளளதாகவும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க அரசு திணறி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்கா இதுவரை எந்த போரிலும் இவ்வளவு உயிரிழப்புகளை சந்தித்தது இல்லை. கொரோனாவால் தினமும் பலியாகும் உடல்களை அடக்கம் செய்வதற்கு கூட முடியாத அளவு உடல்கள் கொத்து கொத்தாக குவிந்து வருவதால் மயான ஊழியர்கள் 24 நேரமும் பணி புரிந்து வருகின்றனர்.