1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (14:00 IST)

போதை பொருள் பயன்படுத்தினாரா எலான் மஸ்க்...?

உலகப் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவன சி.இ.ஓ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டிவிட்டர் எனும் எக்ஸ் நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் எலான் மஸ்க்.

இவர் தனது அதிரடியான நடவடிக்கைகளுக்கான உலகம் முழுவதும் பிரபலமாக வலம் வருகிறார்.

இந்த நிலையில், இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில், எலான் மஸ்க் உலகம் முழுக்க உள்ள விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது கோக்கைன், எஸ்.எஸ்.டி எக்ஸ்டஸி மற்றும் கேட்டமைன் ஆகிய போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும், இதனால்  அந்த  நிறுவன வாரிய உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது என அவர்கள் கவலை தெரிவித்ததாக வால் ஸ்டீர்ட் ஜர்னல் சமீபத்தில் தகவல் தெரிவித்தது.

மேலும், ஸ்பேக்ஸ் எக்ஸ்  மற்றும் டெஸ்லா நிறுவனங்களில் உள்ள  உயர் அதிகாரிகளும் எலான் மஸ்க் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எலான் மக்ஸ் தன்னிடம் போதைப் பொருள் அல்லது ஆல்கஹால் உள்ளிட்ட எந்தவித பொருட்களும் இருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்படவில்லை என்றும்  கூறியுள்ளார்.

இதுகுறித்து எலான் மஸ்கின் வழக்கறிஞர்,  வால் அந்த செய்தி பொய்யான தகவல்களை கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எலான் மஸ்கின் வாழ்க்கையைப் பற்றி நூல் எழுதி வரும் வால்டர் ஈசாக்சன், சட்டவிரோத செயல்களை செய்வதில் உண்மையில் எனக்கு விருப்பமில்லை என்று எலான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.