வங்கதேச –மியான்மர் எல்லையில் கரையைக் கடந்த மோக்கா புயல்
வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் இடையே கரையைக் கடந்துள்ளது.
அந்த புயல் கரையைக் கடக்கும்போது 200கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. அப்போது, இந்த அதிதீவிரப் புயலானது வங்கதேச –மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகள் அதிக சேதத்தை உண்டாக்கியது.
இதனால் அப்பகுதிகளில் கனமழை பெய்து, வெள்ளப் பெருக்கு உருவானது. எனவே முன்னெச்சரிக்கையாக வங்கதேச நாட்டின் காக்ஸ் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மியான்மர் நாட்டில், மோக்கா புயலில் சிக்கி 145 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல் வங்கதேசத்தில் இப்புயலில் சிக்கி 117 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.