ஐபிஎல்-23; ராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்
இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஐபிஎல்-2023, 16 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 10 அணிகளும் தங்கள் திறமையைக் காட்டி வருகின்றன.
இன்றைய 66வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில், தவான் 17 ரன்னும், டைட் 19 ரன்னும், கரன் 49 ரன்னும், ஷர்மா 44 ரன்னும் அடித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ராஜஸ்தான் அணி தரப்பில் சைனி 3 விக்கெட்டும் ஜம்பா, போல்ட் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.