புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (18:33 IST)

கொரோனா சுமார் 5 லட்சம் பேர காவு வாங்குமாம்..??

கொரோனா இப்போதுள்ள வேகத்தில் பரவினால், இம்மாத இறுதிக்குள் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்களாம். 
 
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.   
 
இந்நிலையில், கொரோனா தொற்று இப்போதுள்ள வேகத்தில் பரவினால், இம்மாத இறுதிக்குள் ஊகானில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சீன நோய் தொற்றியியல் நிபுணர் ஆதம் குச்சார்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 ஊகான் நகரில், கொரானா தொற்று உச்சகட்டத்தை அடையும் போது, 20 பேரில் ஒருவருக்கு அதன் பாதிப்பு ஏற்படும் என அவர் கணக்கிட்டு தெரிவித்துள்ளார். நோய் தொற்று தடுக்கப்பட்டால் இந்த விகிதம் குறைய வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார். 
 
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த மருத்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் வைரஸ் பாதிப்பு பரவுவதை மட்டுமே தடுக்கக்கூடிய் சூழ்நிலையில் இப்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.