புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (13:56 IST)

கொரோனா மருந்து கண்டுபிடித்தால் பரிசு – ஜாக்கிசான் அறிவிப்பு!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 900 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். உலகெங்கும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளன. பல்வேறு தனியார், பொதுநல அமைப்புகளும் மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் ஆய்வாளர்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.

இந்நிலையில் பிரபல ஆக்‌ஷன் நடிகர் ஜாக்கிசான் கொரோனா வைரஸுக்கு முறிவு மருந்து கண்டுபிடிப்பவருக்கு 1 மில்லியன் சீன யுவான்களை பரிசாக அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடிக்கும் அதிகமான தொகை இது! ஜாக்கிசான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் மேலும் சில திரை பிரபலங்களும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிய நிதியுதவி செய்ய முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.