ரகசிய இடத்தில் பதுங்கிய சீன அதிபர்: கடுப்பான பொதுமக்கள்!
சீனாவில் கொரோனா வைரஸால் மக்கள் பலர் இறந்துக் கொண்டிருக்கும் நிலையில் சீன அதிபர் மாயமாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத இழப்புகளை கொரோனா ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து ஒரு அறிக்கை கூட சீன அதிபர் ஜி ஜின் பிங் வெளியிடவில்லை.
வைரஸ் தாக்குதலுக்கு பிறகு அவர் மொத்தமாகவே மாயமாகி விட்டார் என்று கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் ரகசியமான ஒரு இடத்தில் தஞ்சமடைந்துள்ளார் என பேசிக் கொள்கிறார்கள். எப்படியிருந்தாலும் நாட்டு மக்களை இதுபோன்ற இக்கட்டான சூழலில் ஜின் பிங் கைவிட்டு விட்டதாக மக்கள் அதிபர் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சீன பிரதமர் லீ கெக் யாங் மட்டும் வூகான் பகுதிக்கு சென்று அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.