வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Thirumalai Sommu
Last Updated : புதன், 16 செப்டம்பர் 2020 (17:25 IST)

வறுமையை முடிவுக்குக் கொண்டுவர ஒத்துழைப்பு இன்றியமையாதது!

கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை என்று சொன்னார் ஒளவையார். வறுமையை வெல்ல வேண்டும். வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை எந்த மனிதனுக்குத்தான் இல்லை. தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வில்லை என்றாலும் தன் வாரிசுகளாவது வசியான வாழ்க்கை வாழ வேண்டும் என கஷ்டப்படும் பெற்றோர்களைப் போலவே ஒரு நாட்டுத்தலைவன் நினைத்தாலே போதும் அடுத்த தலைமுறையில் அந்த நாடு வறுமையில் இருந்து மீண்டுவிடும் என்றால் மிகை இல்லை. பேரிடர் என்றாலும் பெரு வெள்ளம் என்றால் வறுமையின் துயரம் என்றாலும் ஒற்றுமையுடன் கூடிய ஒத்துழைப்பு இருந்தால் அதைவென்று விட முடியும் என்பதே உண்மை.

வறுமை ஒழிப்புக்கிடையில்  COVID-19 தொற்றுநோய் அனைத்து மனிதகுலமும் எதிர்கொள்ளும் ஒரு பெரிய நெருக்கடியாகவும் சவாலாகவும் காணப்படுகிறது. கரோனா பரவலினால் உலக நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொண்டு, மனிதகுலத்திற்கான சமமான எதிர்காலத்தை உருவாக்க சர்வதேச சமூகம்  ஒத்துழைப்பை தீவிரப்படுத்த வேண்டும், உலகளாவிய சுகாதார முறையை பாதுகாக்க வேண்டும் என்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

வறுமைக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்திற்கும், சந்தை மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கும் , உலகம்  முழு ஆதரவை வழங்க வேண்டும், அனைத்து மனிதகுலத்திற்கும் கூட்டாக ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.

கடந்த 40 ஆண்டுகளில், சீனா 700 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து விடுவித்துள்ளது. ஐ.நா.வின் வறுமை ஒழிப்பு இலக்கை சீனா 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடைந்துவிடும் என தெரிகிறது.. சீனாவில் வறிய மக்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டின் இறுதியில் 5.51 மில்லியனாக குறைக்கப்பட்டது, இது 2012 ஆம் ஆண்டின் இறுதியில் 98.99 மில்லியனாக இருந்தது, இது வறுமை எண்ணிக்கையின் விகிதத்தை 10.2 லிருந்து 0.6 சதவீதமாகக் குறைத்தது.

இந்த சாதனைகள், சீன அரசு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளுடன் நெருக்கமாக தொடர்புபட்டுள்ளன என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி விளம்பர துறை அமைச்சர் ஹுவாங் வலியுறுத்தினார். சீனாவின் வறுமைக்கு எதிரான நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடக் கூடாது சீன கலாச்சாரத்தில் ஏழைகளுக்கு உதவுவது எப்போதுமே ஒரு முக்கியமான பாரம்பரியமாகவும், ஒரு தயவைத் திருப்பித் தரும் ஒரு நல்லொழுக்கமாகவும் இருந்து வருகிறது. கட்சி தலைமையிலான வறுமை ஒழிப்பின் மதிப்புமிக்க சாதனைகளை ஒவ்வொருவரும் மதிக்கிறார்கள் சர்வதேச சமூகத்திலிருந்து எங்களுக்கு கிடைத்த நேர்மையான ஆதரவையும் உதவியையும் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று"ஹுவாங் கூறினார்.

முதியவர்கள், குழந்தைகள், முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொள்கை வகுக்கும் பணியில் உலகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா துணைப் பொதுச்செயலாளர் லியு ஜென்மின் வலியுறுத்தினார். வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வளங்கள் இருப்பதை உறுதிசெய்ய சர்வதேச சமூகம் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

பெல்ஜியத்தின் முன்னாள் பிரதமர் யவ்ஸ் லெட்டர்மே, "உலகளாவிய சவால்களுக்கு உலகளாவிய ஒத்துழைப்பு தேவை" என்று வலியுறுத்தினார். 1945 ஆம் ஆண்டிலிருந்து பெறப்பட்ட மகத்தான வறுமை ஒழிப்பு சாதனைகளுக்குப் பின்னால் ஐ.நா. அமைப்பு உள்ளது என்று அவர் கூறினார். "ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்தவும், அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும், அனைத்து களங்களிலும், சர்வதேச ஒத்துழைப்பின் மூலம், நாம் முன்னேற்றம்,அடைய முடியும். என்றார். எனவே கூட்டு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அனைத்து நாடுகளுமே உணர வேண்டிய தருணம் இது. சவால்கள் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு அவசரமாக ஒத்துழைக்க வேண்டிய அவசியம் உள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் தவறான எண்ணங்களையும் கருத்து வேற்றுமைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மேலும் நிலையான எதிர்காலத்திற்கு ஒத்துழைக்க வேண்டிய நேரம் இது