சனி, 23 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2020 (12:02 IST)

ஐந்து குழந்தைகளை கங்கையில் மூழ்கடித்து கொன்ற தாய்: அதிர்ச்சி காரணம்

ஐந்து குழந்தைகளை கங்கையில் மூழ்கடித்து கொன்ற தாய்
நாடு முழுவதும் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பசியும் பட்டினியுமாக வாழ்க்கையை ஓட்டி வரும் நிலையில் வறுமை காரணமாக உபி மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தனது 5 பிள்ளைகளை கங்கை ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த படோகி மாவட்டத்திற்குட்பட்ட ஜஹாகிரா என்ற கிராமத்தை சேர்ந்த மிர்துல் அகா முன்னா- மஞ்சு தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகள் உள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானம் இன்றி இருந்தனர்.
 
இந்த நிலையில் குழந்தைகளின் பசியை மஞ்சு தனது  கணவரிடம் பணம் கேட்டதாகவும், ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று அவர் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இல்லாத நேரத்தில் ஐந்து குழந்தைகளையும் அருகில் உள்ள கங்கை ஆற்றிற்கு அழைத்துச் சென்று தண்ணீரில் மூழ்கடித்துள்ளார். அதன்பின் தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அங்கிருந்த சிலர் அவரை காப்பாற்றிவிட்டனர். 
 
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கங்கை ஆற்றில் மூழ்கிய 5 குழந்தைகளையும் தேடி வருகின்றனர். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரணை செய்தபோது வறுமையால் குழந்தைகளை ஆற்றில் தூக்கி போடவில்லை என்றும் தனது கணவருடன் சண்டை போட்டு வாக்குவாதத்தில் கோபத்தில் கங்கையில் தூக்கி போட்டதாக கூறியுள்ளார். 
 
கங்கை, தற்கொலை, குழந்தைகள் , உத்தரபிரதேசம், ஊரடங்கு, வறுமை,