வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (12:32 IST)

நிலா என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? – பஞ்சாயத்தை தொடங்கிய சீனா – அமெரிக்கா!

நிலாவில் அணுசக்தி நிலையம் அமைக்க அமெரிக்கா ஈடுபட்டுள்ள முயற்சிக்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

சமீப நாட்களில் விண்வெளி ஆய்வில் சீனா தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் விண்வெளி திட்டங்களுக்கு எதிராகவும் பேசி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அதிபர் ட்ரம்ப் அமெரிக்க எரிசக்தி துறை மற்றும் நாசா இணைந்து நிலவில் அணுசக்தி மையம் அமைக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். முன்னதாக அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவிற்கு விண்வெளி படை உருவாக்குவது குறித்து அறிவித்ததுடன் அதற்கான கொடியையும் வெளியிட்டிருந்தார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அமெரிக்கா விண்வெளி, நிலவில் ராணுவ மயப்படுத்த நினைப்பதாகவும், அதன்மூலம் விண்வெளியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் சீன விஞ்ஞானிகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.