செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (11:59 IST)

மகேஷ் பாபுவை பாராட்டிய பாலிவுட் நடிகர்!

நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து விளம்பரத்தில் நடித்தது குறித்து ரண்வீர் சிங் டிவிட்டரில் நெகிழ்ந்து பதிவு செய்துள்ளார்.

நடிகர் மகேஷ் பாபுவும் ரண்வீர் சிங்கும் சேர்ந்து இப்போது தம்ப்ஸ் அப் விளம்பர படத்தில் நடித்துள்ளனர். அது சம்மந்தமாக படப்பிடிப்பு தளத்தில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரண்வீர் சிங் ‘ மிகச்சிறந்த மனிதரான மகேஷ் பாபுவுடன் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருடன் வளமான உரையாடல்கள் நடந்தது.  அன்பும் மரியாதையும் என்றும் எனது சகோதரர் மகேஷ் பாபு காருவுக்கு’ என்று கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான ரண்வீர் சிங் இப்போது முன்னணி நடிகராக வளம் வருகிறார். நடிகை தீபிகா படுகோனை சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.