செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:35 IST)

ஜாக் மா வின் அலிபாபா நிறுவனத்துக்கு 20000 கோடி ரூபாய் அபராதம்! சீன அரசு உத்தரவு!

சீனாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ஜாக் மாவின் அலிபாபா நிறுவனத்துக்கு 20000 கோடி ரூபாய் அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சீன தேசத்தின், ஆன் லைன் வர்த்தகச் சக்ரவர்த்தி என்று புகழப்படும், அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா, கடந்த 2019 ஆம் ஆண்டு தலைமைப் பதவிலிருந்து விலகினார். கடந்த 90 களின் இறுதியில் ஒரு ஆங்கில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஜாக் மா, தன் நண்பர்களுடன் இணைந்து, அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் இவரது நண்பர்கள் இவரை விட்டு ஓடினாலும் தம் உறுதியில் விடாப்பிடியாய் நின்று, இன்று ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெயரையும், சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தின் ராஜாவாகவும் திகழ்கிறார். சீன நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருபருபவரும் ஜாக்மா தான்.

இந்நிலையில் இவரின் அலிபாபா நிறுவனம் போட்டி நிறுவனங்களை முடக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி இவர் மீது சீன அரசு விசாரணையை தொடங்கியது. இதையடுத்து அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவரின் அலிபாபா நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.20,923 கோடி அபராதம் விதித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு ஜாக் மா சீன அரசை எதிர்த்து கருத்துகளை தெரிவித்ததின் பழிவாங்கும் நடவடிக்கையாகதான் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.