1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (17:40 IST)

மத்திய பாஜக அரசால்...அதிமுகவின் ஓட்டு வங்கி பாதிக்கப்படுமா?

இலங்கையில் மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐநாவில் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய அரசு இதைப்புறக்கணித்துள்ளது.
 

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு தாக்குதல் நடத்தியதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்டு இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் இன்று ஐநாடுகள் சபையில் நிறைவேறியது. இந்தத் தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பை இந்திய அரசு புறக்கணித்தது. 13 வது அரசியலமைபு சட்டதிருத்தத்தையும் இலங்கை அரசு அமல்படுத்த இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகளும், எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் இத்தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன.

இதனால் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவினால் அக்கட்சிக்கு ஒட்டு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என  அரசியல் விமர்சகர்கள்  விமர்சனம் தெரிவித்துவருகின்றனர்.