வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (23:32 IST)

அதிபருக்கு ஹோட்டலில் நுழைய மறுப்பு!

அமெரிக்க நாட்டில் கொரொனா விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், நியூயார்க் நகரத்தில் ஐநா நடத்தும் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது.  இதில் கலந்து கொள்ள பிரேசில் அதிபர்  போல்சரேனோ சென்றிருந்தார்.

அப்போது, அமைச்சர்களுடன் அதிபர் போல்சரேனோ அங்குள்ள பீட்சா உணவகத்திற்கு சென்றார். ஆனால் பீட்சா உணவு விடுதி ஊழியர்கள் அதிபர் தடுப்பூசி செலுத்தியுள்ளீர்களா எனக் கேட்டுள்ளனர். இதற்கு இல்லை எனப் பதிலளித்த அதிபர் போல்சரேனோவை உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த ச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.