திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (11:00 IST)

கோவாக்சின் தடுப்பூசி எங்களுக்கு வேணாம்! – 324 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில்

பிரேசிலில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின் தடுப்பூசிகள் வாங்க போட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் பல தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. மேலும் சில நாடுகள் மற்ற நாடுகளிடம் தடுப்பூசிகளை வாங்கி தங்கள் மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் பிரேசிலில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதோடு, 324 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிரேசில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதால் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், சுகாதாரத்துறையே இந்த ஒப்பந்ததை ரத்து செய்யும் முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.