வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (20:05 IST)

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு...

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அந்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் உடனடியாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் நாட்டிற்குச் சென்ற உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 10 பேர் வரை பலியானதாகக் கூறப்படுகிறது.

ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் பல்வேறு நாட்டு மக்கள் தங்களின் நாடுகளுக்குப் போக நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், விமான நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தபோது, குண்டு வெடித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் உதவியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.