1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (21:58 IST)

வங்கதேச நாட்டில் படகு விபத்து...64 பேர் பலி!

bangladesh
வங்கதேச நாட்டில், கரடோயா ஆற்றில் சென்ற படகு  விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், 8 குழந்தைகள், 12 பெண்கள் உள்ளிட்ட  64பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

தென்னாசியாவில் உள்ள நமது அண்டை நாடாக வங்க தேசத்தில்,  பிரதமர் ஷேக்ஹசினா  ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா, பங்கரி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்கள், போதேஸ்வரி கோவிலில் நடக்கும், துர்கா பூஜை விழாவில் பங்கேற்பதற்காக  ஒரு படகு மூலம் கரடோயா ஆற்றின் பயணம் செய்தனர்.


இந்த நிலையில் கரடோயா ஆற்றில் செல்லும் போது,  அந்தப் படலில் அதிக எடை இருந்ததன் காரணமாக  விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், 8 குழந்தைகள், 12 பெண்கள் உள்ளிட்ட 24 பேர் பேர் நீரில் மூழ்கி இறந்ததாகவும்,  25க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும், கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் விபத்தில் சிக்கியவர்கள் குறித்து விசாரித்த நிலையில்  64 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.