சத்தியாகிரகம் செய்து சிறை சென்ற மோடி? ஆவணங்கள் இல்லை! – பிரதமர் அலுவலகம் அளித்த பதில்!
வங்கதேச விடுதலை போரில் பிரதமர் நரேந்திர மோடி சிறை சென்றதற்கு எந்த ஆவணங்களும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி தனது இளவயதில் தன் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசுகிறார். முன்னதாக டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில், முதலைக் குட்டியை வீட்டிற்கு எடுத்து வந்ததாக அவர் சொன்ன சம்பவம் வைரலானது.
அதுபோல கடந்த ஆண்டு வங்கதேச சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வங்கதேச விடுதலை போரில் ஆதரவாக சத்தியாகிரகம் செய்து தான் சிறை சென்றதாக குறிப்பு எழுதி இருந்தார்.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேல்வி எழுப்பப்பட்டபோது, பிரதமர் மோடி வங்கதேச விடுதலைப் போருக்கு ஆதரவாக சத்தியாகிரகம் செய்து சிறை சென்றதற்கான எந்த ஆவணங்களும் இல்லை என பதிலளித்துள்ளது.