வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (22:19 IST)

84 வருடங்கள் கழித்து நூலகத்திற்கு திரும்பி வந்த புத்தகம்

அமெரிக்காவில் உள்ள லூசியானா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் 84 வருடங்களுக்கு முன் வெளியே சென்ற புத்தகம் ஒன்று தற்போது திரும்பி வந்துள்ளது.

லூசியானாவை சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய வீட்டை சுத்தம் செய்யும்போது இந்த புத்தகம் இருந்ததாகவும், இந்த புத்தகத்தில் நூலகத்தின் முகவரி இருந்ததால் கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறினார்.

பின்னர் அந்த புத்தகம் குறித்த குறிப்புகளில் இருந்து அந்த புத்தகத்தை கொண்டு வந்தவரின் தாய், 84 வருடங்களுக்கு முன் நூலகத்தில் இருந்து எடுத்து சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த புத்தகத்தை அவர் நூலகத்தில் இருந்து எடுத்து செல்லும்போது அவருடைய வயது 11 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 84 வருடங்கள் கழித்து புத்தகத்தை கொண்டு வந்ததற்காக நூலகம் அந்த நபரிடம் இருந்து 3 டாலர் அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.