திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 31 மே 2020 (18:25 IST)

பெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவசருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் பாமரர் முதல் பதவியில் இருப்பவர் வரை தாக்கி வருவது குறித்த செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த கொரோனாவுக்கு ராஜ வம்சத்தை சேர்ந்தவர்களும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 
இந்த நிலையில் பெண் நண்பர் ஒருவருடன் பெல்ஜியம் நாட்டின் இளவரசர் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டதை அடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பெல்ஜியம் நாட்டின் இளவரசர் ஜோயேச்சிம் என்பவர் மே மாதம் 26-ம் தேதி தனது பெண் நண்பர் ஒருவருடன்  பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட இரண்டு நாட்களில் அவருக்கு கொரோன வைரஸ் தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரும் அவருடைய பெண் நண்பரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
பெண் நண்பர் உடன் பெல்ஜியம் இளவரசர் கலந்துகொண்ட பார்ட்டியில் சமூக இடைவெளியை பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது