1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 மே 2020 (11:32 IST)

14 ஆயிரத்தை நெருங்கிய சென்னை – மண்டல நிலவரம்!

நான்கு கட்ட ஊரடங்குகள் முடிவடைந்துள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும். நேற்று சென்னையில் 616 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980 ஆக அதிகரித்துள்ளது

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,589 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,709 திரு.வி.க.நகரில் 1,494 தேனாம்பேட்டையில் 1,557 தண்டையார்பேட்டையில் 1,536 அண்ணா நகரில் 1,180 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.