வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 31 மே 2020 (10:41 IST)

கொரோனா நோயாளியை காதலித்தாரா பெண் மருத்துவர்? வைரலாகும் புகைப்படங்கள்

கொரோனா நோயாளியை காதலித்தாரா பெண் மருத்துவர்?
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை அந்த நோயாளிக்கு சிகிச்சை தந்த பெண் மருத்துவர் ஒருவர் காதலித்ததாகவும் இந்த காதல் வெற்றிகரமாக அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் இணையதளத்தில் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகி வருகிறது. எகிப்தை சேர்ந்த இந்த காதல் ஜோடி குறித்த இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது 
 
ஆனால் இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படகாரர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் முகமது பஹ்மி மற்றும் அய மொஸ்பா ஆகியவர்கள் என்றும் இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும் சமீபத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தான் இவை என்றும் கூறினார் 
 
பெண் மருத்துவர் மற்றும் நோயாளி போல் உடை அணிந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை பார்த்து நோயாளியும் பெண் மருத்துவரும் காதலிப்பதாக நெட்டிசன்கள் கதை கட்டி விடுகிறார்கள் என்றும் இதில் எந்த அளவுக்கு உண்மை இல்லை என்றும் மக்கள் இதனை நம்ப வேண்டாம் என்றும் அந்த போட்டோவை எடுத்த கேமராமேன் குறிப்பிட்டு உள்ளார். எனவே கொரோனா காதல் என இணையவாசிகள் தவறாக பதிவு செய்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது