திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 31 மே 2020 (12:09 IST)

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டார் பிந்துமாதவி: வைரலாகும் வீடியோ

கொரோனா வைரஸ் மிக வேகமாக தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸால் பல விஐபிக்களும் தனிமைப்படுத்தும் நிலையில் உள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும், பிரபல நடிகையுமான பிந்து மாதவி தனது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார் 
 
பிந்து மாதவி குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் உள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து சென்னை மாநகராட்சி அந்த அபார்ட்மெண்ட் முழுவதையும் சீல் வைத்து கேட்டை இழுத்து மூடி விட்டதாகவும் பிந்து மாதவி குறிப்பிட்டுள்ளார்
 
தனது அப்பார்ட்மெண்டில் உள்ள அனைவரும் 14 நாட்கள் வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்தியுள்ளதால் தானும் தன்னுடைய வீட்டில் 14நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த 14 நாட்கள் தனக்கு கடினமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கேட்டை இழுத்துப் பூட்டும் பூட்டி அந்த அப்பார்ட்மெண்டில் முன்னால் ஸ்டிக்கர் ஓட்டும் வீடியோ ஒன்றையும் பிந்து மாதவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது