வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (19:33 IST)

ஆப்கானிஸ்தானில் ராணுவம் வான்வழி தாக்குதல்... 20 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அந்நாட்டு ராணுவத்துக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது.  இதில் பயங்கவாதிகள் நடத்தும்  தாக்குதலில் மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அந்நாட்டு அதிபர் பயங்கரவாதிகளை ஒழிப்பதாக சபதம் ஏற்றிருந்தார். இந்நிலையில் இன்று  அந்நாட்டு ராணுவத்துக்கு தலிபான் பயங்கரவாதிகள் ரகசியமாக பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. 
 
பின்னர் ராணுவம் பயங்கவாதிகள் மீது குறிவைத்து  வான் வழி தாக்குதல் நடத்தியது. இதில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் பலியாகினர். அவர்கள் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பயங்கரவாதிகளின் செயலகளுக்கு பயன்படும் 20 இரு சக்கர வாகனங்கள், வெடிமருந்துகள், வெடிமருந்து கிடங்குகள், ஆயுதசாலைகளும் ராணுவத்தினரால் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.