வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (09:00 IST)

திருமண மண்டபத்தில் மனித வெடிகுண்டு: 40 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் திரும்ண மண்டபம் ஒன்றில் மனித வெடிகுண்டு நேற்று இரவு நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் 40 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மேற்கு காபுலில் டாரன் அபுல் என்ற பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்றிரவு ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் வரை கலந்து கொண்ட நிலையில் மக்களோடு மக்களாக ஊடுருவிய மனித வெடிகுண்டு ஒருவன் தன்னுடைய உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த குண்டுவெடிப்பால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் உடல்கள் சிதறின. இதுவரை 40 பேர் பலியாகியிருப்பதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகப்படுகிறது., ஏற்கனவே கடந்த ஆண்டு தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 900 குழந்தைகள் உள்பட 3800 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.