புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (06:49 IST)

பாகிஸ்தான் ராணுவ விமானம் விபத்து: 15 பேர் பரிதாப பலி

பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமான சிறிய வகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பரிதாப பலியாகியுள்ளனர். மேலும் விமானத்தின் பைலட்டுக்கள் இருவரும் பலியாகியுள்ளனர்.
 
இன்று அதிகாலை பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே பாகிஸ்தானின் ராணுவ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த பகுதியில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டதால் இந்த தீயில் கருகி பொதுமக்கள் சிலர் பலியானதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் காயம் அடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது
 
இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்துக்கு எந்தவித சதியும் காரணம் இல்லை என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.