புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2024 (07:12 IST)

நெருங்கி வருகிறது பெபின்கா சூறாவளி; 100க்கும் மேலான விமானங்கள் ரத்து..!

சீனாவில் மையம் கொண்டுள்ள பெபின்கா  புயல் கரையை நோக்கி நெருங்கி வருவதை எடுத்து நூற்றுக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு சீனாவின் கடற்கரையில் பெபின்கா என்ற சூறாவளி மையம் கொண்டிருக்கும் நிலையில் இந்த சூறாவளி விரைவில் கரையை கடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து சுமார் 9000 மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மோசமான வானிலை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புயல் கரையை கடக்கும் வரை சுமார் 600 விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை சீரான பின்னர் மீண்டும் விமானம் செயல்பட தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கிழக்கு சீனா பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புயல் கரையை கடந்த பின் மீட்பு பணிகளுக்காக ஆயிரக்கணக்கான மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva