புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (10:34 IST)

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு: சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

வடகிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னை உள்பட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

வடகிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு, மண்டலமாக மாறி, புயலாக உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது . இதையடுத்து சென்னை நாகப்பட்டினம் உள்பட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து அவ்வப்போது வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவல்களை அறிந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran