ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் டச் ஸ்கிரீன் பிரச்சனை.. அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்..!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் சீரிஸ் வெளியாகி சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், அந்த போனில் டச் ஸ்கிரீன் பிரச்சனை இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 20-ஆம் தேதி ஐபோன் 16 சீரிஸ் வெளியான நிலையில், இந்தியாவிலும் இந்த போன்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் வரிசையில் காத்திருந்து இந்த போனை வாங்கிச் சென்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், ஐபோன் 16 ஸ்மார்ட் போன்களை வாங்கியவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், டச் ஸ்கிரீனில் சில பிரச்சினைகள் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். டச் மட்டும் அல்லாது, ஸ்வைப்புகள் கூட சரியாக வேலை செய்யவில்லை என்றும், இதனால் இதைப் பயன்படுத்துவதில் பிரச்சனை உள்ளது என்றும் பல பயனர்கள் கூறியுள்ளனர்.
டச் ஸ்க்ரீனில் உள்ள மென்பொருள் கோளாறு காரணமாகதான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், புதிய அப்டேட் மூலம் இதனை சரி செய்யலாம் என்று ஆப்பிள் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
Edited by Siva