அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நாளை பதவியேற்க இருக்கும் நிலையில், இந்த பதவியேற்பு விழாவுக்கான செலவு மட்டுமே ரூ.1731 கோடி என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருக்கும் நிலையில், இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சரவை வேட்பாளர்கள் உள்பட 500 நட்சத்திர உறுப்பினர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும், இத்தாலி பிரதமர், டெஸ்லா நிறுவனர், அமேசான் நிறுவனர், மெட்டா நிறுவனர், முன்னாள் அமெரிக்க அதிபர்களான ஜோ பைடன், பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா, முன்னாள் உதவி அதிபர்களான கமலா ஹாரிஸ், ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
நாளை நடைபெற உள்ள இந்த பதவியேற்பு விழா பிரமாண்டமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பதவியேற்ற பின், டொனால்ட் டிரம்ப் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும், குறிப்பாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான திட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Donald Trump's Inauguration
Edited by Siva