புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (09:40 IST)

மிரட்டலுக்கு பணியுமா இந்தியா? அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை!

கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியா, சீனா உட்பட ஐந்து நாடுகளுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு விலகிய அமெரிக்கா, அந்நாட்டுடன் மற்ற நாடுகளுக்கு உள்ள வர்த்தக உறவை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுப்பட்டு வருகிறது. 
 
இதன் ஒரு பகுதியாக இந்தியா, சீனா உட்பட ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகளும் தங்கள் இறக்குமதியை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்தது. 
 
இதற்கான கால அவகாசத்தையும் அமெரிக்கா வழங்கியது. கால அவகாசம் முடிந்த நிலையில் மீண்டும் அமெரிக்க இறக்குமதியை நிறுத்துமாறு எச்சரித்துள்ளது. 
 
இந்த முறை வழக்கம் போல் இல்லாமல் இறக்குமதியை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. 
 
அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. மேற்கு ஆசிய நாடான ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.