தொடர் குண்டுவெடிப்பில் 290 பேர் பலி உயர்வு : நாளை தேசிய துக்கதினம் - இலங்கை அரசு

srilanka
Last Modified திங்கள், 22 ஏப்ரல் 2019 (15:40 IST)
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் நேற்று தேவாலயத்திலும், பிரபல நட்சத்திர விடுதியிலும் தொடர் குண்டுவெடித்தது. இதில் மக்கள் பலர் பலியாகினர். தற்போது வரை 290 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. 
 
இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் அங்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவசர நிலையையும் அறிவித்தார் அதிபர் சிறிசேனா. இன்று நள்ளிரவு முதல் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இந்த அவசரநிலை பிரகடனம் அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்தெரிவிக்கின்றன.
srilanka
மீண்டும் தாக்குதல் நடதப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் இந்தியாவில் புகுந்துவிடாமல் தடுக்கவும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா கடலோர காவல்படையினர்.


இதில் மேலும் படிக்கவும் :