புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (15:03 IST)

ஆபாச சிடிக்களை தூக்கி எறிந்த பெற்றோர்: நஷ்டஈடு கேட்டு வழக்கு போட்ட மகன்

தான் சேகரித்து வைத்த ஆபாச சிடிக்களை பெற்றோர் அழித்ததால் மகன் அவர்கள் மீது நஷ்ட ஈடு வழக்கு போடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் இண்டியானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ஆபாச படங்களுக்கு அடிமையான அந்த இளைஞர் ஏராளமான ஆபாச சிடிக்களை வாங்கி தனது ரூமில் குவித்து வைத்திருந்தார். திடீரென ஒருநாள் தான் வைத்திருந்த ஆபாச சிடிக்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் கேட்டபோது, அவர்கள் தான் இதனை அழித்தது தெரியவந்தது.
இதனால் கடுப்பான அந்த இளைஞர் சிடிக்களை அழித்ததற்காக தனது பெற்றோர் இந்திய மதிப்பில் 60 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பது என்று நீதிமன்றமே திணறி வருகிறதாம்.