பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் அமெரிக்கா: பாதுகாப்பு உதவிகள் நிறுத்தம்!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் பாகிஸ்தான் அரசை கடுமையாக சாடினார். பாகிஸ்தானில் இயங்கி வருகிற ஹக்கானி வலைச்சமூகம், அல்கொய்தா, தலீபான் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் மீது அந்நாட்டின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.
இதனால் அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளது. மேலும், தீவிரவாதிகளை ஒழிப்பதாக பொய் சொல்லி ஏமாற்றி அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதி பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு உதவிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்த பிறகே பாதுகாப்பு உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.