வடகொரியாவை எச்சரிக்க தென்கொரியாவில் களமிறங்கிய அமெரிக்கா
தென் கொரிய போர் விமானங்களுடன் இணைந்து அமெரிக்கா குண்டு வீச்சு விமானங்களை கொண்டு ஒத்திகை செய்துள்ளது.
அமெரிக்காவை எச்சரிக்க வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு ஆயுதம் ஆகியவற்றை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இதனால் போர் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. ஆனால் பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தென் கொரிய போர் விமானங்களுடன் இணைந்து அமெரிக்க குண்டு வீச்சு விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரிய எல்லையில் இருந்து 150 கி.மீ தொலைவில் இந்த ஒத்திகை நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தென்கொரியா அமெரிக்கா கூட்டு ராணுவ ஒத்திகைகள் வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஒத்திகை அணு ஆயுதப் போர் துண்டுதல் நடவடிக்கை என வடகொரியா தனது அரசு ஊடகத்தில் தெரிவித்துள்ளது.