ஹை ஹீல்ஸ் செருப்பால் பேராபத்தில் சிக்கிய பெண்(அதிரவைக்கும் வீடியோ காட்சி)
கெக்ஸிகோவில் பெண் ஒருவர் ஹைஹீல்ஸ் செருப்பை மாட்டிக்கொண்டு ரோட்டில் ஓடிய போது கால் தவறி பெரும் விபத்தில் சிக்கியுள்ளார்.
இன்றைய நவீன காகக் கட்டத்தில் பெண்கள் பலர் ஹைஹீல்ஸ் செருப்பையே அணிவதை விரும்புகின்றனர். இதில் பலர் தங்களின் உயரத்தை கூட்டவே இப்படி செய்கின்றனர். சில நேரங்களில் நாகரிகம் என்று செய்வதே பேராபத்தாக மாறி விடுகிறது.
மெக்ஸிகோ நோகால்ஸ் நகரில் மினர்வா என்ற பெண் ஹைஹீஸ் செருப்புடன் வேகமாக ரோட்டை கடக்க முற்படுகிறார். வேகமாக வந்த அவர் செருப்பு வழுக்கி கீழே விழவே ரோட்டில் வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதுகிறது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதன்மூலம் ஹைஹீல்ஸ் அணியும் பெண்கள் இனி ரோட்டை கடக்கும் போது பார்த்து கடக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.