வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (14:03 IST)

ஜெயக்குமாரின் வீட்டில் நண்டை விட்டு போராடிய பெண்...

அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டின் அருகே நண்டை விட்டு போராட்டம் நடத்திய பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

 
நர்மதா நந்தகுமார் என்கிற பெண் இன்று காலை அமைச்சர் ஜெயக்குமார் வசிக்கும் சென்னை பட்டினப்பாக்கம் வீட்டின் அருகே வந்தர். அதன் பின் நண்டுகளை எடுத்து கீழே விட்டார். அவரை போலீசர் கைது செய்தனர்.
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால், செய்தியாளர்களிடம் தினமும் பேசும் அமைச்சர் ஜெயக்குமார் பல திட்டங்களை கூறுகிறார். ஆனால், எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை. எனவே, அந்த திட்டங்களை வேகமாக செயல்படுத்தாவிடில், அடுத்து ஆமைகளை விட்டு போராட்டம் நடத்துவேன்” என அவர் பேட்டி கொடுத்தார்.