1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (13:39 IST)

ஜப்பானில் பரவும் புதிய வகை பாக்டீரியா..! 48 மணி நேரத்தில் ஆளையே கொள்ளும்.! அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

Japan Bactariya
மனிதர்களின் தசையை தின்று 48 மணி நேரத்தில் ஆளையே  கொள்ளும் புதிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சம் பேர் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். வைரஸ் தொற்றால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஜப்பானில் புதிய வகை பாக்டீரியா பரவி வருவது பொதுமக்களிடையே பெறும் பீதியை கிளப்பியுள்ளது. 
 
ஸ்டெப்டோ கார்க்கில் டாக்ஸிக் சோக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த புதிய நோய் மனிதர்களை தாக்கியதும் அவர்களின் தசைகளை தின்ன தொடங்கி பாதிக்கப்பட்ட நபர்களின் உயிரை பறித்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காய்ச்சல், கடும் உடல் சோர்வு, மூட்டுவலி, தொண்டைவலி, மூச்சு திணறல், வீக்கம் போன்றவை இவற்றின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்றும் பின்னர் திசு மற்றும் உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டு மரணம் நிகழும் என்றும் டோக்கியோ மருத்துவ பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. இந்த பாக்டீரியா தாக்கி 48 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட நோயாளி உயிரிழப்பர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 


தற்போதைய நிலவரப்படி ஜப்பானில் 977 பேர் இந்த அரியவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் இது 2500ஆக உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து ஜப்பானில் கொரோனா காலத்தில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.