ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 27 மே 2024 (11:41 IST)

இழுத்துக் கொண்டே செல்லும் நலன் குமாரசாமியின் “வா வாத்தியார்” ஷூட்டிங்… அப்செட்டில் தயாரிப்பாளர்!

ஜப்பான் படத்தை முடித்த நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் பாதியளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டே இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில் பாதிப் படம் முடிந்ததும் கார்த்தி பிரேம்குமார் இயக்கும் ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் நடிக்க சென்று அந்த படத்தை முடித்துவிட்டார். ஆனால் இன்னும் ‘வா வாத்தியார்’ ஷூட்டிங் நிறைவடையவில்லை.

இதற்கு இயக்குனர் நலன் குமாரசாமியின் மெத்தனமானப் போக்குதான் காரணம் என தயாரிப்பு தரப்பு அப்செட்டில் இருக்கிறதாம். இன்னும் 75 சதவீதம் படம் கூட முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.