1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 ஆகஸ்ட் 2018 (12:54 IST)

தீவிபத்தில் உயிரைக்கொடுத்து குழந்தைகளை காப்பாற்றிய தாய்

சீனாவில் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை தாய் ஒருவர் உயிரை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் நிகரற்ற உறவு என்பது தாய்ப்பாசம் தான். தந்தையின் பாசம் கூட தாயின் பாசத்திற்கு பின்னர் தான். அதற்கு முன்னுதாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
சீனாவில் ஹெனான் மாகாணம் ஷுசாங் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்புவாசிகள் வேகமாக குடியிருப்பை விட்டு வெளியேறினர்.
 
இந்த விபத்தில் சிக்கிக் கொண்ட தாய் மற்றும் அவரது 2 குழந்தைகள் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். சமயோஜிதமாக யோசித்த அந்த தாய், ஜன்னல் வெளியே எட்டி கீழே பார்த்தார். ஏராளமானவர்கள் கீழே நின்று கொண்டிருந்தனர்.
 
உடனடியாக ஒரு போர்வையை எடுத்து கீழே போட்டார். கீழே இருந்தவர்கள் போர்வையை விரித்து பிடித்துக் கொண்டனர். தனது இரண்டு குழந்தைகளையும் கீழே போட்டார். கீழே இருந்தவர்கள், குழந்தையை பத்திரமாக மீட்டனர். 
 
கீழே இருந்தவர்கள் அவரையும் குதிக்கும்படி வலியுறுத்தினர். அதற்கு அவர் முயற்சி செய்தார். புகை மூட்டம் அதிகமானதால் அவர் வீட்டிலே மயங்கி விழுந்தார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த  தீயணைப்பு படையினர் படுகாயமடைந்த அந்த பெண்மணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
தன் உயிரை கொடுத்து தாய் குழந்தைகளை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.