திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:48 IST)

100 குழந்தைகளை வளர்க்க ஆசைப்படும் தம்பதியர்....

சுமார் 100குழந்தைகளை வளர்க்க ஆவலுடன் உள்ள இளம் தம்பதியரைப் பற்றிய செய்திகள் இணையதளங்களில் வைரலகி வருகிறது.

இந்த உலகில் உள்ள செல்வங்களில் முதன்மையான செல்வம் குழந்தைச் செல்வம் தான். குழந்தைகள் வீர்ட்டின் செல்வங்களாகவே கருதப்படுகின்றது.

இந்நிலையில் ரஷ்ய நாட்டைச் சேந்தவர் காலிப். இவரது மனைவி கிறிஸ்டினா. இவர்கள் இணைந்து அங்கு ஒரு உணவகம் நடத்தி வருகின்றனர்.

இந்தத் தம்பதியர்க்கு தற்போது 11 குழந்தைகள் உள்ளன. இவர்களுக்கு குழந்தைகள் மீது அதிகப்  பாசம் இருப்பதால்  இனிமேல் 105 குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் வளர்த்துவரும்  11 குழந்தைகளில் கிறிஸ்டினா  இயற்கையாகப் பெற்றெடுத்த 1 குழந்தைதான். மற்ற குழந்தைகளை அவரது கணவர் மற்றும் பிறர் மூலம் மரபணு ரீஇதியாக வாடகைத் தாய் மூலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தான் அவர் மீதிக் குழந்தைகளையும் பெற்றெடுப்பார் என தெரிகிறது.

மேலும் கிறிஸ்டினா விருப்பத்திற்கு அவரது கணவர் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.