வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:18 IST)

விஷாலின் 'சக்ரா'' படம் குறித்த புதிய அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் சக்ரா. இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படம் சக்ரா.

இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ரிலீசாகும் என விஷால் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு யு/ஏ என்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெலுங்கு வெர்சனுக்கு சென்சார் இனிமேல் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சக்ரா படத்தின் ஹிந்தி டிரைலரை சமீபத்தில்  படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்சன் படத்திற்கு உரிய விறுவிறுப்புடன் இந்த டிரைலர் காட்சியமைப்பு இருந்தது.

இந்த டிரைலர் விஷால் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விஷாலில் முதல் ஹிந்தி டப்பிங் படம் இது என்பதால் நிச்சயம் இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது/

இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய ஒரு மொழிகளிலும் இன்று மாலை 5 மணிக்கு ரிலீசாகும் என நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.