1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 9 மார்ச் 2024 (19:53 IST)

கடல் ஆமை கறியை சாப்பிட்ட 8 குழந்தைகள் பலி...

tanzania
தான்சானியாவில் கடல் ஆமை கறியை சாப்பிட்டதில் 8 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தான்சானியா நாட்டின் ஜஞ்சிபார் என்ற பகுதிக்கு உட்பட்டது பெம்பா தீவு. இங்கி வசித்து வரும் பொதுமக்கள் ஆமைக் கறியை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
 
இதில், முதியவர்கள் 78 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 குழந்தைகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி  ஒருவர் கூறியதாவது:  உயிரிழந்தோர் அனைவரும் கடல் ஆமை கறியை வாங்கி வந்து சாப்பிட்டவர்கள் என மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.  இதில், 78 முதியவர்கள் உடல் நலம்  பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச்சில் தான்சானியவின் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்த மாபியா தீவில் வேணி என்ற பகுதியில் கடல் ஆமைக் கறி வாங்கி வந்து சாப்பிட்ட 7 பேர் பலியாகினர். 8 பேர்  உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இந்த ஆமை கறி விஷம் நிறைந்தது என்று  சந்தேகிக்கப்படுகிறது ''என்று தெரிவித்துள்ளார்.