செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 ஜூன் 2023 (09:00 IST)

தான்சானியா நாட்டில் சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கிளை: இயக்குனர் காமகோடி தகவல்

தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான தான்சானியா  என்ற நாட்டில் சென்னை ஐஐடி கிளை திறக்கப்பட உள்ளதாகவும் சென்னை தவிர வேறு இடங்களில் கிளை திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் தேசிய கல்வி மைய தரவரிசையில் சென்னை ஐஐடி முதல் இடத்தை பிடித்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தென்னாபிரிக்க நாடான தான்சானியாவில் சென்னை ஐஐடியின் புதிய கிளை தொடங்க இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
 
நமது இந்தியாவின் அடிப்படையை அறிவை பகிர்வது தான் என்றும் கல்வியை வியாபாரமாக நாம் பார்ப்பதில்லை என்றும் தான் தான்சானியாவில் சென்னை ஐஐடி தொடங்க இருப்பது புதிய மைல்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
தான்சானியா அரசும், இந்திய அரசும் இந்த புதிய கிளைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva