1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (16:48 IST)

பிச்சைக்கார பாட்டியின் வங்கி கணக்கில் 7 கோடி!

பிச்சைக்கார பாட்டி ஒருவரின் வங்கி கணக்கில் ஏழு கோடி ரூபாயும், அவரது பையில் இரண்டு லட்ச ரூபாயும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் வீதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த கால் இல்லாத பாட்டி ஒருவர் சாலையோரத்தில் இறந்துகிடந்தார். 
 
அவரது உடலை கைப்பற்றிய போலீசார், அவரது பையை சோதனை செய்தபோது, அவரது பையில் இந்திய மதிப்பில் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு பல லெபனான் நாட்டு ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார். 
 
மேலும், அவரது வங்கிக் கணக்கு புத்தகமும் சிக்கியது. அதில், ஏழரை கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அந்த பாட்டியின் பெயர் பாத்திமா ஆத்மன். அவருக்கு வயது 54 என்பது குறிப்பிடத்தக்கது.