வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (22:06 IST)

ரூ.2500 கோடி வரிபாக்கி: சென்னை ஐடி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு சென்னை உள்பட உலகின் முக்கிய நகரங்களில் செயபட்டு வரும் ஐடி நிறுவனம் காக்னிசென்ட். இந்த நிறுவனத்திற்கு வருடம் ஒன்றுக்கு சுமார் ரூ.1500 கோடி வருமானம் வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் தரமணி, பள்ளிக்கரணை, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் செயல்பட்டு காக்னிசென்ட் நிறுவனத்தில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்களை கைப்பற்றப்பட்டு அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது காக்னிசென்ட் நிறுவனம் சுமார் ரூ.2,500 கோடி வரி செலுத்தாமல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காக்னிசென்ட் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த நிறுவனத்திடம் இருந்து எவ்வித விளக்கமும் வரவில்லை என்பதால் அதிரடியாக காக்னிசென்ட் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை, மும்பையில் உள்ள வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி வைத்துள்ளனர். மேலும், வங்கியில் உள்ள வைப்பு நிதியையும் அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.