1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 18 ஏப்ரல் 2018 (12:39 IST)

கர்நாடகாவில் சோதனையில் சிக்கிய ரூ. 7 கோடி கள்ள நோட்டுகள்!

கர்நாடகாவில் ரூ 7 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் போலீசார் சோதனையில் சிக்கியது
 
கர்நாடகாவில் சட்டபேரவைத் தேர்தலை யொட்டி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று இரவு பெலகாவி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரில் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் ரூ 7 கோடி மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அந்த பணம் கள்ளநோட்டுகள் என தெரியவந்தது.
 
இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து, அங்குள்ள சோதனை சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.