தினமும் 11 கிலோ. மீ., வேலைக்கு நடந்து சென்ற பெண்... காத்திருந்த அதிர்ச்சி ...
அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தினமும் நடந்து வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது ஒருவர் அப்பெண்ணுக்கு காரை பரிசாக கொடுத்து ஆனந்த அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கால்வெஸ்ட்டனில் ஒரு பிரசித்தி பெற்ற ஓட்டல் ஒன்று உள்ளது.
இங்கு அட்ரியானா என்ற பெண் பணியாற்றி வருகிறார். அவர் தினமும் ஹோட்டலுகும் வீட்டுக்குமான 22 கி.மீ தூரத்தை நடந்து சென்றே பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த ஹோட்டலுக்கு உணவருந்த இருவர், அட்ரியானா கார் வாங்குவதற்காக பணம் சேர்த்து வைத்து வருவதை அறிந்துகொண்டதாகத் தெரிகிறது.
அதன்பின்னர், அருகே உள்ள ஒரு கார் ஷோரூமுக்குச் சென்று ஒரு நிசான் செண்ட்ரா (Nissan sentra ) காரை வாங்கிப் பரிசளித்துள்ளனர். இதை எதிர்பார்க்காத அட்ரியானா ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். இப்போது காரிலேயே ஓட்டலுக்குச் சென்று வருகிறார்.